இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

06 October 2010

கிளி/புனித பற்றிமா.றோ.க.த.க.வித்தியாலயம் - ஒரு பார்வை

4 கருத்துக்கள்

இப்பாடசாலை  1952இல்  திரு..அந்தோனிப்பிள்ளை  என்பவரால்  பற்றிக்கமம் என்றழைக்கப்பட்ட  காணியில்  ஓலைக்குடிசையில்  25 பிள்ளைகளுடன்  ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே  இப்பாடசாலை  58 ஆண்டுகால  வரலாறு  கொண்டது. இதன்  ஆரம்ப  கர்த்தா  கத்தோலிக்க  குருவான  வண. பிதா. சூசைநாதர்  என்பவராவார்.  இப்பாடசாலை  A9 சாலையிலிருந்து  மேற்கே, உருத்திரபுரம்  செல்லும்  பிரதான  வீதியில்  4 ½ km  தொலைவில்  அமைந்துள்ளது.இப்பாடசாலைக்கு  முன்னாலே  ஓடுகின்ற  இரணைமடு  ஆற்றின்  நீரும், சுற்றிலும்  அமைந்துள்ள    தென்னந்தோப்பும்   இப்பாடசாலைக்கு   இயற்கையான  அழகையும்,மாணவர்களுக்கு  கற்றலுக்கான  சூழலையும்  வழங்குகின்றது.


இப்பாடசாலை  கத்தோலிக்க  முகாமையாளரை  கொண்டிருந்தாலும், சிறப்பான  முகாமைத்துவமும்  அதன்  பலனாக  விளைந்த  நற்கல்வியும் , மேலான  ஒழுக்கமும்  அதிகளவான  இந்துக்களையும்  இப்பாடசாலையில்   கற்பதற்கு  தூண்டியது 1952 இல் தரம்  ஐந்து  வரை  மட்டும்  இயங்கிய  இப்பாடசாலை பின்னர்  படிப்படியான  வளர்ச்சிபெற்று  வருகையில்  1963 ஆம்  ஆண்டு  இப்பாடசாலை  அரசின்  தேசிய  மயமாக்கப்பட்டது. 1980 களில்  இப்பாடசாலையில்  GCE(O/L) வரை  பயின்று  நற்பெறுபேற்றை     பெற்ற  பலர்  இன்று  வன்னி  சமூகத்தில்  பணியாற்றி   வருகின்றனர் இவர்களில்  ஒரு  ஆசிரியை, அருட்சகோதரி.ஆமண்டீன்   அவர்கள்  தமக்கு  மூன்று  படங்களை   கற்பித்துக்கொண்டு  நிர்வாக   வேலைகளையும்  செய்ததையும், அதே  காலப்பகுதியில்   துடிப்புடன்  செயற்பட்ட  ஆசிரியை திருமதி.மாணிக்கவாசகர்(மகேஷ்  teacher) ஐந்து  பாடங்களை  கற்பித்ததையும்   நினைவுகூர்ந்தார்.

 
1995 ஆம்  ஆண்டு  யாழ்ப்பாண   இடப்பெயர்வின்  காரணமாக  இப் பாடசாலைச் சூழலில்     யாழ்  மக்கள்  அதிகம்  பேர்  தற்காலிகமாக  குடியேறினர், இம்மாணவர்களுக்கும்  இப்பாடசாலை  தரமான  கல்வியை  வழங்கியது, அக்கலப்பகுதியிலேயே  அதிகளவான  மாணவர்களை  இப்பாடசாலை கொண்டிருந்தது   எனினும்  அர்ப்பணிப்புடன்  செயற்பட்ட  அதிபர், ஆசிரியர்குழாம் சிறப்பான  கல்வி  மற்றும்  இணைப்பாடவிதான   செயற்பாடுகளை  வழங்கியதென்றே  கூறலாம் இப்பாடசாலை  1996 ஆம்  ஆண்டு  முதன்முதலாக  ஒரு  இடப்பெயர்வை  சந்தித்தது  அது  சத்யெய  ராணுவ  நடவடிக்கையாகும்
அக்கராஜன்  பிரதேசத்திலுள்ள  ஆரோக்கியபுரம்  (8 ஆம்  கட்டை) எனும்  இடத்தில்  1996 இலிருந்து  2000 ஆம்  ஆண்டு  வரை  இயங்கிய இப்பாடசாலை, பாடசாலையின்  இன்றுவரையான  GCE(O/L) சிறந்த  பெறுபெற்றினையும்   இடம்பெயர்ந்த  நிலையில்  ஈட்டிக்கொண்டது  சிறப்பு  அம்சமாகும்திரு. இதயராஜன்  இதயரூபன்  (1999 ஆம்  ஆண்டு  GCE(O/L) batch) 9 பாடங்களில்  விசேட  சித்தியும் , 2 பாடங்களில் திறமைச்சித்தியும்  (9D, 2C) பெற்றுக்கொண்டார். பின்னாளில்  இவர்  மருத்துவ   பீடத்திற்கு  தெரிவாகி  தற்போது  மருத்துவராகவுள்ளார் இவரைபோன்ற  பலர்   உயிரியல்துறையிலும், கணிததுறையிலும், முகாமைத்துறையிலும், கலைத்துறையிலும், இன்னும்  சிறப்பாக                   பொதுலசிந்தனையுடன்  செயற்படக்கூடிய   பலரை  இப்பாடசாலை  உருவாக்கியுள்ளது  என்றால்  அது  மிகையல்ல.


இப்பாடசாலையை  நிர்வகிப்போர்   திருக்குடும்ப  சபையைச்சேர்ந்த  அருட்சகோதரிகள்என்பது  மரபாகும். இந்த  வரிசையில்  தற்போதைய  அதிபர் அருட்சகோதரி. அன்ரநீற்றா மாற்கு  இப்பாடசாலையின்  10 வது   அதிபராவார்.இதற்கு  முன்னர்  அதிபர்களாக  இருந்தவர்களில்  அருட்சகோதரி.ஆமண்டீன், அருட்சகோதரி.கொஷ்கா, அருட்சகோதரி.மரிய  கொறற்றி, அருட்சகோதரி.எலிசபெத்தம்மா,அருட்சகோதரி.திரேசா  சில்வா  ஆகியோர்   குறிப்பிடத்தக்கவர்கள். 

(இவர்கள்  பணியாற்றிய  காலம்,சேவைகள்,மற்றும்பாடசாலையின்  இன்றைய  நிலை  மற்றும்  தேவைகள்  பற்றி  தொடர்ந்து  பார்ப்போம்). “இறைவனே  எங்கள்  ஒளி எனும்  வாசகத்தை  தாரகமந்திரமாகக்கொண்டு இயங்கும்  இப்பாடசாலை  மென்மேலும்  வளர  நாமும்  வாழ்த்துகின்றோம்.

தகவல்கள் : அருட்சகோதரி எலிசபத்
                          ஆசிரியர் யூலியட்
                          ஆசிரியர் கண்ணபிரான்

-உருத்திரபுரத்திலிருந்து குணா- 

.
 எமது கிராமத்தை கட்டியெழுப்புவதற்கு.. பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கு...மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு உதவி செய்ய யாராவது விரும்பின் நேரடியாக பாடசாலைகளை தொடர்பு கொள்ளலாம்.. இல்லாவிடின் duruthirapuram@gmail.com என்ற எமது மின்னஞ்சலினூடாக தொடர்பு கொண்டால் நாம் ஏற்பாடு செய்து தருவோம்.

4 கருத்துக்கள்:

Post a Comment