இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

11 December 2010

புனரமைக்கப்படும் உருத்திரபுரம் வீதிகள்

1 கருத்துக்கள்





உருத்திரபுரம் பாடசாலை வீதி புனரமைப்பதற்காக கிரவல் போடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். இந்த நிகழ்வு உருத்திரபுரம் மக்களாகிய எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இன்னொருவிடையத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த வீதிகள் பிரதேச சபைக்கு உட்பட்டவை. அதுபோக  மழை காலத்தில் உருத்திரபுரம் வீதிகள் மழையில் அமிழ்ந்து போவது வழமையாகி உள்ளது. காரணம் சீரற்ற வடிகாலமைப்பு மற்றும் மண்வீதிகள். எனவே அவசியமான மற்றும் கிராமத்தின் பிரதான வீதிகளை சிறந்த முறையில் செப்பனிடுவது அவசியம். இந்த வீதிகள் கட்டாயம் DBST Road எனப்படும் வீதி அமைப்பு முறையில் செய்யப்பட வேண்டும். அதாவது கற்களை போட்டு தார் இடப்பட வேண்டும். வீதிகளின் அவசியம் மற்றும் நீண்ட கால நோக்கோடு சிந்தித்து கிராமத்து பிரதிநிதிகள், கிராமத்து மக்கள் மற்றும் கிராமத்து நலன் ஆர்வலர்கள் இது குறித்து பிரதேச சபையிடம் பேசி தார் வீதிகளை போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நாம் வேண்டுகிறோம். மற்றய பிரதேசங்களில் சிறு சிறு வீதிகளே தார்வீதிகளால் செப்பனிடப்படும் போது பழமையான இந்த கிராமத்தின் வீதிகள் இன்னமும் கிரவல் வீதிகளாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது கவலையளிக்கிறது. எனவே இந்த விடையங்கள் குறித்து கிராமத்து பிரதிநிதிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசவேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

புகைப்படங்கள்:பிரதீஸ்

நன்றி

வலைப்பதிவு ஆசிரியர்
மா.குருபரன்

1 கருத்துக்கள்:

Post a Comment