உதாரணப் படம் |
இன்று ஏ.ஜி.ஏ மீட் போட்டிகளின் கரப்பந்தாட்டம் ஆரம்பித்தது. இன்று காலை ஆரம்பமான போட்டிகளில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மற்றும் உழவர் ஒன்றியம் விளையாட்டுக் கழகம் என்பன தமது புதிய விளையாட்டு சீருடையுடன் நீண்ட இடைவெளிக்கு பின் இறங்கியமை உருத்திரபுரம் கிராமத்திற்கு பெருமையே.
இன்றைய முதலாவது போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமும் உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகமும் சம பலத்துடன் களம் இறங்கின. 1:1 என்ற செட்களில் சமநிலையில் இருந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3 வது செட்டில் அரை நேரம் வரை உழவர் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் இருந்த போட்டியில் இறுதி அரைநேரத்தில் விறுவிறுப்பாக விளையாடி உருத்திரபுரம் விளையாட்டக்கழக அணியினர் வெற்றியை தமதாக்கினர்.
நீண்ட காலத்திற்கு பிறகு கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய இரண்டு விளையாட்டுக்கழகத்தினருக்கும் கிராம மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று புகைப்படம் எடுக்க கூடிய வசதி இல்லாமையினால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. இனிவரும் போட்டிகள் பற்றிய படங்கள் எடுக்க முடிந்தால் இங்கு தரவேற்ற முயற்சிக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------
வீரர்களுக்கு உங்கள் வாழ்த்துகளையும் இங்கு தெரிவிக்கலாம்.(இங்கு கருத்து பகுதியில் தெரிவிக்கலாம் அல்லது உங்கள் வாழ்த்துகளை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் வாழ்த்துகள் பகுதியில் இணைத்துக் கொள்வோம்)
உங்கள் கருத்துகளை தயவு செய்து "கருத்துகள்" பகுதியில் பதிவு செய்யுங்கள். அவற்றை நாம் இங்கு பிரசுரிப்போம். உங்கள் கருத்துகள் தான் எமது செயற்பாட்டை செம்மைப்படுத்தும். Comment As எனும் இடத்தில் Google/Gmail ஜ தெரிவு செய்து உங்கள் Gmail கணக்கினூடாக கருத்தை பதிவு செய்யலாம் கணக்கு இல்லை எனின் Anonymous என்பதை தெரிவு செய்து சாதாரணமாக கருத்தை பதிவு செய்யலாம். (மறக்காமல் பெயரையும் இடுங்கள்)
இரண்டு விளையாட்டுக்கழகத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிரேன். புகைப்படம் இருந்தால் மிகவும் நல்லது.முயற்சி செய்யுங்கள்.
இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்..
விளையாட்டுக்களில் போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவோம்..
பொறாமைகளை ஒழிப்போம்...இந்த சேவையை வழங்கும் உருத்திரபுரம் blogspot சேவைக்கு எனது வாழ்த்துக்கள்..வளர்க உனது சேவை..
இ.அருள்
உருத்திரபுரம் விளையாட்டு கழகம்
Anonymous:தயவு செய்து உங்கள் பெயரை குறிப்பிட்டு கருத்துரை இடவும்
நிட்சயமாக அருள் அண்ண..... போட்டி மனப்பான்மையை மட்டுமே எமது கழகங்கள் கொள்கையாக கொண்டு சிறந்த விளையாட்டு வீரர்களையும் சமூகத்தையும் உருவாக்க பாடுபடவேண்டும்.
எமது தளத்திற்கான ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கும் வரை உருத்திரபுரம் தளம் வளர்ந்து கொண்டே இருக்கும்.
மா.குருபரன்