கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபைக்கான விளையாட்டுப் போட்டின் உதைபந்தாட்ட போட்டிகள் இன்று காலை கிளிநொச்சி றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்தது. இந்த போட்டியில் 8 அணிகளே பங்கு பற்றீயிருந்தன. உருத்திரபுரத்தை சேர்ந்த 3 கழகங்களில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் மற்றும் உழவர் ஒன்றியம் விளையாட்டுக் கழகம் என்பன பங்கு பற்றின. சந்திரோதையா விளையாடு:டுக்கழகம் நேரம் தாமதித்து மைதானத்திற்கு வந்ததால் போட்டியில் இருந்து விலக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
உதைபந்தாட்டப் போட்டியின் ஆரம்ப போட்டி உரத்திரபுரம் விளையாட்டுக் கழகத்திற்கும் ஸ்கந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய உருத்திரபுரம் அணியினர் 3:0 எனும் விகிதத்தில் வெற்றி பெற்றனர். மற்றொரு போட்டியில் உழவர் ஓன்றியம் விளையாட்டுக் கழகமும் திருநகர் விளையாட்டுக் கழகமும் பங்குபற்றின. இந்தப் போட்டியில் 1:0 என்ற விகிதத்தில் திருநகர் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டது.
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலதிக தகவல்கள்மற்றும் புகைப்படங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.
*******************************************************************
இன்று காலை றொட்றிக்கோ மைதானத்தில் இளந்தளிர் விளையாட்டுக் கழகத்திற்கும் உருத்திரபுரம் விளையாட்டுக்களகத்திற்கும் அரயிறுதிப்போட்டி ஆரம்பமானது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் அசாதரண சில முடிவுகள் போட்டியின் போக்கை மாற்றின. நேற்று நடந்த போட்டியில் உருத்திரபுரம் விரர் எதிரணிவீரரால் தலையில் தாக்கப்ட்ட நிலையில் காயங்களுடன் வெளியேறியிருந்தார். அதே போன்றாக இன்றைய போட்டியிலும் முக்கிய வீரர் இந்திரனும் தலையில் தாக்கப்ட்டு காயத்துடன் விளையாட வேண்டிய நிலை காணப்பட்டது. இப்படியான சீரற்ற தன்மையால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பின் பனால்ட்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்ட்டது. அதனடிப்படையில் 3:2 எனும் விகிதத்தில் இளந்தளிர் அணி வெற்றியீட்டியது.
வார நாளில் நடாத்தப்ட்ட இந்த போட்டிக்கு தமது வேலைத்தளங்களில் இருந்தும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளிலிருந்தும் தமது செயற்பாடுகளை நிறுத்தி பல பிரதேசங்களில் இருந்து உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் கூடியிருந்தமை நம்பிக்கை ஊட்டும் செயலாக இருந்தது.
இனிவரும் காலங்களில் நடைபெற இருக்கும் போட்டிகளில் எமது கிராமத்தை சேர்ந்த 3 கழகங்களும் தமது திறமையை மெருகூட்டி போட்டிகளில் திறம்பட செயற்பட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக வீரர்களுக்கு வாழ்த்துகிறோம்.
இந்த சுற்றுப் போட்டி தொடர்பான சில புகைப்படங்களை கிழே காணலாம்.
![]() |
உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் |
![]() |
உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் |
![]() |
உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் |
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் |
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் |
![]() |
உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர் பேபி |
![]() |
பயிற்சியின் போது உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர் சுமன் |
![]() |
![]() |
போட்டி நடுவர்களுடன் |
![]() |
உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர் பிரதீஸ் |
![]() |
போட்டியின் போது |
![]() |
உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர் பிரதீஸ் பந்தை எடுக்கும் காட்சி |
அணி வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...உடனுக்குடன்
சேவையை வழங்கும் உருத்திரபுரம்..blogspotdukku எனது நன்றிகள்..
வளர்க உனது சேவை...உனது சேவைகள் அனைத்தும் தரமானவை...
நன்றி
அருள்
உருத்திரபுரம் விளையாட்டு கழகம்
வருகைக்கும் கருத்தூடட்டலுக்கும் மிக்க நன்றிகள் அருளண்ண.