கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் 2011 ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி (கால் கோள் நிகழ்வு) மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அந்த நிகழ்வு சம்மந்தப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம். தகவல் மற்றும் புகைப்படங்கள் : christina(2011 கலைப்பிரிவு)
விசேட அறிவித்தல்கள்
எமது வலைத்தளத்தில் உருத்திரபுரம் பிரதேச மக்களின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகிறோம். நீங்கள் தகவல் அனுப்ப வேண்டிய முகவரி duruthirapuram@gmail.com
அறிவித்தல்கள்
Facebook இணைய
Facebook இல்
இன்று..

உருத்திரபுரம் கிராமம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அபிவிருத்திக்கும் உங்கள் தகவல்களையும் கத்துப்பரிமாற்றங்களையும் மற்றும் பங்களிப்பு தொடர்பாக ஆலோசிக்கவும் இந்த முகவரியூடாக தொடர்பு கொள்ளுங்கள்
duruthirapuram@gmail.com. உருத்திரபுரம் கிராமம் தொடர்பாக உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் தரவுகளை கட்டாயம் அனுப்பி வையுங்கள்.
நன்றி
duruthirapuram@gmail.com. உருத்திரபுரம் கிராமம் தொடர்பாக உங்களிடம் இருக்கும் ஆவணங்கள் தரவுகளை கட்டாயம் அனுப்பி வையுங்கள்.
நன்றி
பற்றிமா பாடசாலை

Powered by Blogger.
இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.
Saturday, January 22, 2011
1ம் ஆண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி - உருத்திரபுரம் மகாவித்தியாலயம்


Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு முதலாம் வகுப்பு எடுத்த ஜனனி டீச்சர் க்கும் அதனைத் தொடர்ந்து வந்த வகுப்புக்களில் கல்வியையும், ஒழுக்கத்தையும், தாய் நாடு, தமிழ்மொழிப் பற்றையும்
கற்றுத் தந்த ஆசான்களுக்கும் ,அதிபர்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றியது இந்த கால் கோள் நிகழ்வின் படங்கள் கண்ட போது.
எனது பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் கண்டிப்பானவர்களாகவும் அன்பானவர்களாகவும் எமக்கு கல்வியைப் புகட்டினார்கள்
பல நினைவுகளில் ஒரு உதாரணம் :
ஒரு முறை வகுப்புத் தலைமை அடையாளம் அணியாமல் பள்ளி சென்று திரு .சண்முகராஜா அதிபரிடம் மாட்டிக் கொண்டேன்
முறையா மாட்டினான் இண்டைக்கு பிரம்பு முறியப் போகுது என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டே நின்றேன்
உடனே அதிபர் கேட்டார் - எங்கே monitor batch ?
-மறந்திட்டன் sir
-மறதிக்கு மருந்து என்ன? சொல்லு என்றார்
-என்ன சார் இது தெரியாதா ? மாஸ்டர் இன்ர பிரம்பு என்றேன் சிரிச்சுக் கொண்டு
சார் இக்கு அடக்க முடியாத சிரிப்பு அதை வெளிக்காட்டாமல்
அப்ப சரி நான் stop சொல்லும் வரை "மறதிக்கு மருந்து மாஸ்டர் இன்ர பிரம்பு "என்று சொல்லு என்றார் நானும் சொல்லத் தொடங்கினன்
இரண்டு மூன்று தடவை சொல்லி இருப்பன் .... இனி மறந்தால் , அடி உதை உதவிற மாதிரி ....." மிச்சத்த சொல்லிக் கொண்டு ஓடு வகுப்புக்கு என்றார்
நானும் தப்பினன் பிளைச்சன் என்று எடுத்தன் ஓட்டம்
ஆனால் , அன்று முதல் பள்ளிப் பொருட்கள் எதுவும் மறக்க இல்லையா என்பதை சரி பார்த்துக் கொண்டே அன்றும் சரி இன்றும் புறப்படுவேன்.
"கல்வியே எங்கள் மூலதனம்"
நிட்சயமாக. நினைவுகள் இனிமையானவை. உங்களுடைய பள்ளிக்காலங்கள் பற்றிய குறிப்புகள் ஏதாவது எழுதி அனுப்பினால் இங்கு பிரசுரிக்கப்படும். வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி M.K.Goby