
1950 ற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் கிளிநொச்சி நகரில் உருவான கிரமமே உருத்திரபுரம். உருத்திரபுரம் என்பது ஒருவிவசாய கிராமம். 1957 காலப்பகுதியில் நடந்த இனப்பிரச்சினை காரணமாகவும் ஒரு தொகுதி மக்கள் உருத்திரபுரம் கிராமத்தை வந்தடைந்தனர். இந்த காலப்பகுதியில் உருத்திரம் கிராமத்தில் பெரும்பாலானவை கொலனி வீடுகளாகவே காணப்பட்டன. வீட்டோடு ஒன்றரை ஏக்கர் நிலமும் வயல்காணியும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மனையோடு சேர்ந்த மேட்டு நிலத்தில் தோட்டம் செய்தல்,கோழிவளர்த்தல்,ஆடு, மாடு வளர்த்தல் போன்றனவும் வயல் செய்தலுமே பிரதான ஜீவனோபாயமாக இருந்தது. மேலதிகமாக மீன்பிடித்தல்,சலவை செய்தல்,கள்ளு சீவுதல்,பறையடித்தல், தச்சு வேலை, மேசன் வேலை, முடிதிருத்துதல் போன்ற தொழிலையும் சில மக்கள் பிரிவினர் செய்து வருகின்றனர்.
தொழிலில் எவ்வளவு அக்கறையும் தீவிரமும் கொண்ட மக்களாயினும் கல்வியறிவில் அனைவரும் எழுத வாசிக்க தெரிந்தவர்களாகவே ஆரம்பித்தில் கூட இருந்தனர். பெற்றோர்களுக்கு கல்விமேல் இருந்த அக்கறை பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கின்றனர் என்பதற்கு இன்றைய தலைமுறை சாட்சியாக உள்ளது.
இந்த கிராமம் வடக்கில் எள்ளுக்காடு,கிழக்கில் எட்டாம் வாய்க்கால், மேற்கில் 10ம் வாய்க்கால் மற்றும் சிவநகர், தெற்கில் முறிப்புக்கு இடையில் வயல் பிரதேசங்களையும் கொண்ட இந்த அழகிய கிராமத்தை இரணைமடுவில் இருந்து குடமுறுட்டியில் சென்றடையும் குட்டி ஆறு ஊடறுத்து செல்கிறது. இந்த வாய்க்காலே உருத்திரபுரத்தின் வயல்களுக்கான முற்று முழுதான நீர்ப்பாசன சாதனம். உருத்திரபுரத்தில் வயல்கள் காலபோகம் பெரும்போகம் எனும் இரண்டு போகங்கள் செய்யப்படுகின்றன.
உருத்திரபுரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதேசங்களான
1)எள்ளுக்காடு
2)7ம் வாய்க்கால்
2)8ம் வாய்க்கால்
3)சிவநகர்
4)10ம் வாய்க்கால்
இவற்றினுடைய வரலாறுகளை பிரதேச வாரியாக பார்ப்போம்.
உங்களுடைய கருத்துகளையும் உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் எங்கோடு பகிர்ந்து கொண்டு உருத்திரபுரம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு : duruthirapuram@gmail.com
0 கருத்துக்கள்:
Post a Comment