இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, February 2, 2011

அவசர நிலமைகள் - உருத்திரபுரம் மகா வித்தியாலையம்

0 கருத்துக்கள்
அதிபர்: திருமதி.மீனலோஜினி இதயசிவதாஸ்
உருத்திரபுரம் மகாவித்தியாலையத்தின் இன்றைய நிலமை மற்றும் அவசர தேவைகள் குறித்து இந்த பதிவை எழுதுகிறேன். 
இன்று உருத்திரபுரம் மகாவித்தியாலையம் சிதைவடைந்த நிலையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு எழுந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் வரவு கூடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் ஒரு வாரத்தில் பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டியை நடாத்த உள்ளது. அதற்கான தயார்ப்படுத்தலில் பாடசாலை ஆசிரியர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இவை பாடசாலையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் விடையங்கள். அது போக இன்று பாடசாலை சாதித்துள்ள மற்றும் சந்தித்துள்ள பிரைச்சினைகள் குறித்து விரிவாக எழுதவேண்டிய நிலையில் உள்ளேன். இதில் குறிப்பிடப்படும் விடையங்களை உள்வாங்கி மிக விரைவாக செயற்படுமாறு பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.


உருத்திரபுரம் பாடசாலையானது உருத்திரபுரம் (10ம் வாய்க்கால்..8ம் வாய்க்கால்) எள்ளுக்காடு சிவநகர் முறிப்பு இப்படி பல கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களை கொண்ட ஒரு பெரிய பாடசாலை என்பது யாவரும் அறிந்த விடையம். இன்று உருத்திரபுரத்தில் மின்சார வசதி இல்லாது இருப்பினும் பாடசாலை அதிபரின் முயற்சியினால் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கணினி கல்வி கொடுக்கப்படுகிறது. மின்சார வசதியே இல்லாத கிராமத்தில் அதுவும் கணினி என்பது வெறும் கற்பனையாகவே இருந்திவிடக்கூடிய வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உருத்திரபுரம் மகாவித்தியாலையம் தனியாக ஆசிரியரை நியமித்து கணினி கல்வியை வழங்கிக் கொண்டிருப்பது அனைவருக்கும் பெருமையே.  தவிர பரீட்சை காலங்களில் மற்றும் தயார்ப்படுத்தல் காலங்களில் மாணவர்களுக்கு இரவு வகுப்புகளும் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.பாடசாலை கணினி கூடத்தில் மாணவர்கள்
பாடசாலை கணினி கூடத்தில் மாணவர்கள்
இதே போல் தான் அனைத்து கற்பித்தல் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் கடுமையாக உழைக்கின்றனர். அதிபரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் சில தேவைகள் பாடசாலைக்கு பூர்த்தியாகியிருப்பதாகவும் அறிகிறேன்.


உருத்திரபுரம் கிராம மக்கள் பலர் இன்று பல துயரங்களுக்கு மத்தியில் இருப்பதால் உருத்திரபுரம் மகா வித்தியாலைய மாணவர்கள் பலர் காலை உணவு இன்றியே பாடசாலை வருகின்றனர். அவர்களுக்கான சத்துணவை யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.
இல்ல விளையாட்டுப்போட்டிக்கான நடன நிகழ்ச்சி பயற்சி
இவைதான் இன்று பாடசாலையில் நடக்கும் மிக முக்கியமான  நிகழ்ச்சிகள். 

இனி பாடசாலைக்கு தேவையான அவசர உதவிகள் குறித்து பார்ப்போம்.உருத்திரபுரம் மகா வித்தியாலைய மாணவர்களுக்கு சத்துணவிற்கான உதவிகளை யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு சொய்திருப்பதானது எத்தனையோ ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களை கொண்டிருக்கும் உருத்திரபுரம் மகாவித்தியாலையத்தின் இயலாத்தன்மையா  என ஒரு கணம் யோசிக்க வைத்தது. 

  • தவிர கணினி கூடத்தை இயக்கி பாடங்களை நடாத்த பாடசாலைக்கு    ஒரு நாளைக்கு ஏறத்தாள 300 ரூபாய் செலவாவதாக அதிபர் கூறினார்.
  • எதிர்வரும் 11ம் திகதி கால நிலை சீராக இருந்தால் இல்ல விளையாட்டுப்போட்டி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. இதற்கு விளையாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. 
  •  இல்ல விளையாட்டுப் போட்டி  முடிவடைந்த பின்னர் கோட்ட மட்ட போட்டிகள் றடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளில் உருத்திரபுரம் மகாவித்தியாலையம் பங்கு பற்றும் பொழுது ஆண்கள் மற்றும் பெணகள் அணியினர் விளையாட்டிற்கான சீருடையுடன் பங்குபற்றுவது பாடசாலைக்கான கெளரவத்தை கொடுக்கும். 
  • இனிவரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளை ஆவணப்படுத்தல் அல்லது தெரியப்படுத்தல் என்பவற்றிற்கு Hard copy முறை அதாவது சுருள் முறையிலான புகைப்படங்கள் எடுப்பது தபால் மூலம் படங்கள் அனுப்புவது என்பது இன்றைய நவீன உலகில் நேர தாமதத்தையும் வேலைப்பழுவையும் அதிகரிக்கும். உடனுக்குடன் பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளை பெற்றுக்கொள்ள பாடசாலைக்கு சாதாரண டிஜிட்டல் கமரா இன்றியமையாத ஒன்று.


இந்த விடையங்களை கருத்தில் கொண்டு பழைய மாணவர்கள் அனைவரும் விரைவாக செயற்பட்டு பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டிக்கு முன்னர் உங்களால் இயன்ற பங்களிப்பினை செய்யுங்கள். கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டியில் உருத்திரபுரம் மகாவித்தியாலையம் சீருடையுடன் பங்கு பற்றுவதை உறுதிப்படுத்துங்கள். கணினி கல்வியை தொடர்ந்து இடைவிடாது நடாத்துவதற்கு எரிபொருட் செலவுகளை பொறுப்பெடுங்கள்.உருத்திரபுரம் கிராமத்தின் மத்தியின் அமைந்திருக்கும் தாய்ப் பாடசாலையான உருத்திரபுரம் மகாவித்தியாலையத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உருத்திரபுரம் கிராமத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள். 


இன்று (2-2-2011) மாலை பழைய மாணவர் சங்க கூட்டம் கூடுகின்றது. அது பற்றிய தகவல்களை விரைவில் தருகிறேன்.படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்.
பழைய மாணவர் சங்க கூட்ட அழைப்பிதழ் கடிதம்.
பாடசாலையுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்புகளை உறுதிப்படுத்துங்கள். அல்லது என்னுடன் தொடர்பு கொண்டால் பாடசாலை தொடர்புகளை ஏற்படுத்தி தரமுடியும்.
 பாடசாலை தொலைபேசி இலக்கம் : +94(0)213208211
என்னுடன் தொடர்பு கொள்ள: duruthirapuram@gmail.com
  
மேலும் சில புகைப்படங்கள்
கரப்பந்தாட்ட மத்தியஸ்த்தர்கள்

போட்டியில் பங்கு பற்றும் சேரன் மற்றும் பாண்டியன் அணியினருடன் போட்டி மத்தியஸ்தர்கள்

போட்டியில் பங்குபற்றும் சேரன் மற்றும் பாண்டியன் இல்ல அணித்தலைவர்கள் நாணைய சுழற்சியில்போட்டி நடைபெறும் மைதானம்

போட்டி நடைபெறும் மைதானம்

போட்டி நடைபெறும் மைதானம்
நெருக்கடியான நிலையில் பாடசாலை அலுவலகம்
நெருக்கடியான நிலையில் பாடசாலை அலுவலகம்
பாடசாலை கணினி கூடத்தின் உட்பகுதி
பாடசாலை விஞ்ஞான கூடத்தின் உட்பகுதி
 பாடசாலையின்  அவசர நிலையை கருத்தில் கொண்டு பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் விரைந்து செயற்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


தகவல் மற்றும் புகைப்படங்கள்

உருத்திரபுரத்தில் இருந்து: மா.குருபரன்

பாடசாலையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது  duruthirapuram@gmail.com என்ற மின்னஞ்சலினூடு தொடர்பு கொண்டால் பாடசாலையுடன் நேரடித் தொடர்பு பெற்றக் கொடுக்கப்படும்

0 கருத்துக்கள்:

Post a Comment