இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, February 23, 2011

உருத்திரபுரம் மகாவித்தியாலையம் ஒரு பார்வை - திரு.கா.நாகலிங்கம் (முன்னாள் அதிபர்) உருத்திரபுரம் மகாவித்தியாலயம்

0 கருத்துக்கள்
 திரு.கா.நாகலிங்கம் (முன்னாள் அதிபர்) உருத்திரபுரம் மகாவித்தியாலயம்

உருத்திரபுரம் மகாவித்தியாலயம் இவ்வித்தியாலயம் ஆரம்பத்தில் பரந்தன் புதுக்குடியிருப்பு அரசினர்தமிழ்க்கலவன் பாடசாலை என்ற பெயரில் 1950ஆண்டு அரம்பமானது இதன் முதற்பிரதி அதிபராக திரு.எஸ்.சிதம்பரப்பிள்ளை என்பவர் நியமனமானார்.அப்பொழுது பாடசாலைக்கான நிரந்தரக்கட்டிடம் காணப்படவில்லை. அப்போதய குடியேற்ற அதிபர் திரு.வீ.கிருஷ்ணப்பிள்ளையின் ஆதரவுடன் அவரது கந்தோருக்கருகில் கட்டிடப்பொருட்கள் சேமித்துவைத்த தகரக்கொட்டிலில் ஆரம்பமானது.ஆசிரியருக்கான மேசையும் கதிரையும் கிடைத்தபோதிலும் மாணவர்களுக்காக எதுவும் கிடைக்கவில்லை.பலகைத்துண்டிலும் மண்ணிலுமே இருந்துபடித்தனர்.மாணவரும் மிகக்குறைவு.
பதினைந்து நாட்களின் பின் திரு.வே.கதிரவேலு அவர்கள் நிரந்தர அதிபராக நியமனம் பெற்று வந்தார்.இந்த இடமாற்றத்தை விரும்பாத பிரதி அதிபர் தான் மாறிப்போகும் போது பாடசாலை பதிவுப்புத்தகத்தில் ''கறையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுந்தைப்போல புதிய அதிபரிடம் பாடசாலைப்பொறுப்பை ஒப்படைக்கிறேன் என எழுதிச்சென்றார்.இதை2007ம் ஆண்டுவரை காணக்கூடியதாக இருந்தது.
புதிய அதிபர் கதிரவேலு அவர்கள் வீடுவீடாகச்சென்று எல்லோருடனும் கதைத்து மாணவர் தொகையை கூட்டியதுடன் மிகவிரைவில் பாடசலைக்கான 120அடி நீளமும் 20அடி அலமும் கொண்ட கட்டிடத்திற் குடிபுகுந்தனர். மாணவர்களுக்கான இருக்கை வசதிகளும் பெற்றுக்கொடுத்தார். இவரது முயற்சியால் கிளிநொச்சியில் முதலாவது அரசினர் சிரேஸ்ட பாடசலை உருவானது. நீர்ப்பாசன இலாகாவிற்கு முன் ஒரு பாடசாலையும்,குஞ்சுப்பரந்தனில் ஒரு பாடசாலையும்அரசினர் பாடசலையாக இருந்த போதிலும் அங்கு 5ம் வகுப்பு மாத்திரமே இருந்தது.
அப்போது இளம்வயதுடைய பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இப்பாடசாலையில் நியமிக்கப்பட்டதால் படிப்பிலும் விளையாட்டிலும் வெளிவேலைகளிலும் மாணவர்கள் முதன்மையாக காணப்பட்டனர்.பல இடங்களிலிருந்தும் வேப்பமரங்கள் கொண்டுவந்து நட்டுப்பாதுகாத்தனர்.இன்றும்இவை பாடசாலைக்கு முன்னால் அழகும் நிழலும் கொடுத்து நிற்பதைக்காணலாம்.
1952ம் ஆண்டில் பாடசாலைக்கு முன்னால் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களால் நடப்பட்ட மா மரம் இன்று கிளைபரப்பி நிழல்கொடுக்கின்றது. திரு.வே.கதிரவேலு அர்கள் 1961ல் பேரதெனியாவுக்கு இடம்மாறிச்சென்றபோது மட்க்களப்பு ஆசிரியபயிற்சிக்கலாசாலை அதிபராய் இருந்த திரு.நவரத்தினராசா அவர்கள் அதிபரானார்.இப்படி பல திறமைவாய்ந்த அதிபர்களை தன்னகத்தே கொண்ட இப்பாடசாலை திரு.கதிரவேலு காலத்திலேயே உருத்திரபுரம் கனிஸ்ட பாடசாலையாக உயற்சிபெற்றது.
அத்துடன் சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் காலத்திலே கிளிநொச்சியில் விஞ்ஞானகூடமும் விவசாயகூடமும் கொண்ட, உயர் வகுப்புக்களையும் கொண்டிருந்தனால் கிளிநொச்சியின் பல கிராமங்களிருந்தும் மாணவர்கள் இங்குவந்து கல்விகற்றனர். 
இங்கு கல்விகற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருந்துள்ளனர்,இருக்கின்றனர். திரு.அ.கணபதிப்பிள்ளை அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழத்திலும்,யாழ்பல்கலைக்கழகத்திலும்,புவியியற்துறை விரிவுரையாளராக இருந்துள்ளார்.திரு.க.விமலராசா அவர்கள் இளைஞர் சேவை அதிகாரியாக இருந்துள்ளார்.திரு.வே.நடசன் அவர்கள் உணவக்கட்டுப்பாட்டதிகாரியாக இருந்துள்ளார்.திரு.வே.ஐயம் பெருமாள் இலங்கை வங்கிமாவட்ட அதிகாரியாக இருந்துள்ளார். திரு.க.கணேஸ் அவர்கள் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரியாகவும்,திரு.க.மகேசன் அவர்கள் பல்வேறு பதவிகள் வகித்து உருத்திரபுரத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
பலர் கல்வி அதிகாரியாகவும் விளையாட்டதிகாரியாகவும் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் கிராமசேவகர்களாகவும் வைத்தியர்களாகவு
பட்டதாரிகளாகவும் பல்வேறு காரியாலய அதிகாரிகளாகவும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களாளவும் இப்பொழுது கடமைபுரிகின்றனர்.   
   
நன்றி :-  திரு.கா.நாகலிங்கம் (முன்னாள் அதிபர்) உருத்திரபுரம் மகாவித்தியாலயம்

0 கருத்துக்கள்:

Post a Comment