![]() |
உதாரணப் படம் |
இன்று கிளிநொச்சியில் கடைபெற்ற கரைச்சி பிரதேச சபைக்கான விளையாட்டுப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக அணியினர் 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே எல்லா போட்டிகளிலும் தமது ஆதிக்கத்தை தக்க வைத்த உருத்திரபுரம் விளையாட்டுக் கழக அணியினர் இறுதிப் போட்டிவரை முன்னேறிச் சென்றனர். தொடர் போட்டிகள், போட்டியின் போது ஏற்பட்ட காயங்கள், காயங்களுக்கு உடனடி மருத்துவம் செய்து அடுத்த போட்டிக்கு தயார்ப்படுத்தக் கூடிய வசதியின்மை, மற்றும் போதிய அளவு வீரர்கள் இன்னமும் கிராமத்திற்கு வந்து சேராமை போன்றன இறுதிப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தின.
அதிக அளவிலான வீரர்கள் காலை மற்றும் அடுத்தடுத்த போட்டிகளில் காயமுற்று சோர்வடைந்த நிலையில் இருந்தனர். இதனால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய உருத்திரபும் விளையாட்டு அணியினர் மைதானம் சென்று விட்டு பின் போட்டியில் இருந்து விலகினர். விரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கபடி அணித்தலைவர் தெரிவித்தார்.
இறுதிப்போட்டிவரை முன்னேறிய எமது கிராமத்தின் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 கருத்துக்கள்:
Post a Comment