இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, February 2, 2011

பழைய மாணவர் சங்கம்- உருத்திரபுரம் மகா வித்தியாலையம்

0 கருத்துக்கள்

உருத்திரபுரம் மகாவித்தியாலைய நிர்வாக தெரிவும் தீர்மானம் நிறைவேற்றலும் சிறப்பான முறையில் நேற்று (2-2-2011) மாலை பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.

தலைவர்: பாடசாலை அதிபர் ( திருமதி.மீனலோஜினி இதயசிவதாஸ்)
தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள்

செயலாளர்     : செல்வன் ம.அஜந்தன்
பொருளாளர்  : செல்வி பே.சாமினி
உப செலாளர் : செல்வன் பெ.புண்ணியமூர்த்தி
நிர்வாக உறுப்பினர்கள் : திருமதி த.விஜிதா (ஆசிரியர்)
                                                   செல்வி ச.தர்சினி (ஆசிரியர்)
                                                   திருமதி க.ஜெயராணி (ஆசிரியர்)
                                                   செல்வி த.சர்மிளா
                                                   செல்வன் சு.மகேந்திரன்
                                                   செல்வன் சி.கோணேஸ்
ஆலோசனை மற்றும் போசகர்கள் :திருமதி கு. மங்கையற்கரசி
                                                                          திருமதி ச. சரஸ்வதி
கணக்கு பரிசோதகர் : திருமதி சி.சந்திராதேவி

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
  • அனைத்து பழைய மாணவர்களுக்குமான வருடாந்த சந்தா பணம் 240 ரூபா (20 X 12).
மிக முக்கிய தீர்மானம்
  • நடைபெற உள்ள பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி முழுமையாக பழையமாணவர்களால் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப்போட்டிக்கான அனைத்து செலவுகள் மற்றும் ஒழுங்கு படுத்தல்களை உருத்திரபுரம் பழைய மாணவர் சங்கம் நிறைவேற்றுவதென நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் முதற் கட்டமாக பிரதேசத்தில் உள்ள மற்றும் மற்றும் பிரதேசத்துடன் தொடர்பிலுள்ள உத்தியோகம் செய்யும் பழைய மாணவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் பெற்றுக்கொள்வெதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தவிர ஏனைய பிரதேசங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் உங்கள் பங்களிப்பை செய்யலாம். பங்களிப்பு செய்யும் கரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது பலமும் அதிகரிக்கும் என்பது வெளிப்படை உண்மை. இதை கருத்தில் கொண்டு விரும்புபவர்கள் நேரடியாக பாடசாலையுடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பினை உறுதி செய்யுங்கள்.
தொடர்பிற்கு
அதிபர் : திருமதி.மீனலோஜினி இதயசிவதாஸ்
பாடசாலை தொலைபேசி : 021 3208211 


தகவல்
உருத்திரபுரத்தில் இருந்து: மா.குருபரன்

0 கருத்துக்கள்:

Post a Comment