இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Monday, June 20, 2011

ஆரம்பம் - கிளிநொச்சி மாவட்ட லீக் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி - 2ம் இணைப்பு

0 கருத்துக்கள்


ஆரம்பமானது கிளிநொச்சி மாவட்ட லீக் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி
கிளிநொச்சி மாவட்ட பதிவு செய்யப்பட்டவிளையாட்டுக் கழகங்களுக்கு  இடையிலான சுற்றுப் போட்டி நேற்று [20/06/2011,திங்கட்கிழமை] 3.00 மணியளவில் ஆரம்பமானது.இச் சுற்றுப் போட்டி 1.30 மணித்தியாலம் கொண்ட 1 நாளுக்கு 1 போட்டி வீதம் தொடர்ந்து நடத்துவதற்கு நிர்வாகத்தினரால் தீர்மாணிக்கப்பட்டது.அதற்கமைய நேற்றைய  போட்டியில் குறிஞ்சி.வி.க எதிர் இளம்பறவை.வி.கமும் மோதிக்கொண்டன.இதில் 7-0 என்ற கோல் கணக்கில் இளம்பறவை.வி.கம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்நேறியது.இன்றைய போட்டியில் ஜொலிபோய்ஸ்.வி.கமும் லக்கிஸ்ரார்.வி.கமும் மோதுகின்றன.சுற்றுப் போட்டியில் ஓவ்ஓரு போட்டியிலும் சிறந்த விளையாட்டு வீரன் தேரிவு செய்யப் படுவதுடன்,ஓவ்ஓரு போட்டியிலும் மாவட்ட ஆணிக்கான 2 வீரர்கள் தேரிவு செய்யப்படுவது சிறப்பு அம்சமாக காணப்படுகின்றது.  மேலதிக தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்  

கிளிநொச்சியில் இருந்து பிரதீஸ்    


2ம் இணைப்பு..

இரண்டாம் நாள் ஆட்டம்.
மேற்படி போட்டியானது செவ்வாய் கிழமை ஜொலிபோய்ஸ்.வி.கமும் லக்கிஸ்ரார்.வி.கமும் மோத இருந்தது.எனினும்   ஜொலிபோய்ஸ்.வி.கம் வராத காரணத்தினால்  லக்கிஸ்ரார்.வி.கம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்நேறியது..இன்றைய போட்டியில் எமது கிராமத்தை சேர்ந்த சந்திரஉதயா.வி.கமும் திருநகர்.வி.கமும் மோதுகின்றன.இதில் எமது கிராமத்தை சேர்ந்த சந்திரஉதயா.வி.கம் வெற்றி பெற  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
மேலதிக தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.  

0 கருத்துக்கள்:

Post a Comment