இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Wednesday, October 19, 2011

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் நடத்திய மாபெரும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 2011

0 கருத்துக்கள்
மிகச்சிறந்த ஒழுங்குபடுத்தலில் வெற்றிகரமாக கோலாகலமாக மாபெரும் உதைபந்தாட்ட போட்டியை நடாத்தி முடித்திருக்கிறது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம். போட்டியை திறம்பட நடாத்தி முடித்திருக்கும் உருத்திரரும் விளையாட்டுக்கழகத்தினருக்கு எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்விற்காக கழகத்தினருடன் அயராது உழைத்த கிராம மக்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். கீழே புகைப்படத் தொகுப்பினை காணலாம்.

யாழ் முல்லை மாவட்ட முன்னணி கழகங்களை இணைத்து கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்ட மாபெரும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியின் வெற்றிக்கேடயத்தினை சுபீகரித்துக்கொண்டது கிளிநொச்சி வலைப்பாடு ஜெகமிட்பர் விளையாட்டுக்கழகம். இச்சுற்றுப்போட்டியானது மீள் குடியமர்த்தலின் பின்னர் வெளிமாவட்ட அணிகளை இணைத்து கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது சுற்றுப்போட்டியாகும். இச்சுற்றுப்போட்டியில் 21 அணிகள் பங்குபற்றி இருந்தன. நான்கு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இப்போட்டிகளில் பல ஆயிரம் ரசிகர்கள் கலந்த போட்டியாக இச்சுற்றுப்போட்டி அமைந்து இருந்தது. முதல்முறையாக யாழ்ப்பாண மாவட்ட அணியுடன் கிளிநொச்சி மாவட்ட அணியொன்று எமது உருத்திரபுர மண்ணில் இறுதிப்போட்டியில் மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரபேற்பினை பெற்றிருந்தது. இவ் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் றோயல் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து விளையாடிய வலைப்பாடு ஜெகமிட்பர் விளையாட்டுக்கழகம் 2-0 என்ற கோள் கணக்கில்  வெற்றி பெற்று வெற்றி கேடயத்தினை சுபீகரித்துக்கொண்டது.
                                      இச்சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டுக்கழகத்துக்குரிய வெற்றிக்கேடயத்தினை புவனேந்திரராசா ஞாபகர்த்தமாகவுமஇ; சிறந்த வீரருக்குரிய கேடயத்தினை ஜோன் குட்டி ஞாபகர்த்தமாகவுமஇ; சிறந்த கேப்காப்பாளருக்கான வெற்றி கேடயத்தினை வசந்ததீபன் ஞாபகர்த்தமாகவும்இ தொடர் ஆட்ட நாயகனுக்குரிய வெற்றி கேடயத்தினை உமாரமணன் ஞாபகர்த்தமாகவுமஇ; இரண்டாம் இடத்துக்கான வெற்றி கேடயத்தினை கண்ணன் மாஸ்டர் ஞாபகர்த்தமாகவும்இ முதலாம் இடத்துக்கான வெற்றி கேடயத்தினை ரமேசன்இ கருணதாஸ் ஞாபகர்த்தமாகவும்இ முதலாவது அணிக்கான தனிப்பட்ட வீரர்களுக்குரிய வெற்றிக்கேடயங்களை கஜகுகன் சண்முகலிங்கம் ஞாபகர்த்தமாகவுமஇ; முதலாவது இடத்துக்கான பணப்பரிசினை விக்கி ஆசிரியர் அவர்களும்இ இரண்டாவது பணப்பரிசினை திருமதி சிவாம்பிள்ளை ஞாபகர்த்தமாகவும் வழங்கப்பட்டது. இச்சுற்றுப்போட்டியினை கோலாகலமாக நடத்துவதற்கு சகல வழிகளிலும் ஆதரவு வழங்கிய கிராமமக்களஇ; நலன்விரும்பிகள் அனைவருக்கும் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
























































































0 கருத்துக்கள்:

Post a Comment