இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Thursday, October 21, 2010

முக்கிய அறிவித்தல்

0 கருத்துக்கள்
எமது இந்த உருத்திரபுரம் கிராமத்திற்கான பொதுவானவலைத்தளத்தில் ஒவ்வொரு விளையாட்டுகழககங்களுக்கும் பாடசாலைகளுக்கும் தனித்தனி பக்கங்களை உருவாக்கலாம் என உத்தேசித்துள்ளோம். அந்தந்த கழகங்கள் பாடசாலைகள் சம்மந்தப்பட்ட செய்திகளை அந்ததந்த பக்கங்களில் இடுமிடத்து வாசகர்கள்  மற்றும் நலன்விரும்பிளின் தேவைகள் இலகுபடுத்தப்படுவதோடு ஆவணப்படுத்தல் நேர்த்தியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

அதனால் கழகஉறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கழகங்கள் தொடர்பான தகவல்கள் சமகால செய்திகளை எமது மின்னஞ்சல் முகவரியான duruthirapuram@gmail.com என்பதற்கு அனுப்பிவைத்தால் நல்லது. 

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எம்மோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக செய்திகளை நாம் இலகுவாக பெற்றுக்காண்டிருக்கிறோம். அதுபோல் உழவர்ஒன்றியம் மற்றும் சந்திரோதையா விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் ஆர்வமெடுத்தால் அவற்றிற்கான பக்கங்களையும் நேர்த்தியாக செய்யமுடியும். அல்லது அந்தந்த கழகத்திற்கு வேறுபக்கங்கள் இருந்தால் நந்துதவுங்கள் அதை நாம் இங்கு இணைத்து கொள்வோம்.

அனைத்து கழகங்கள் பாடசாலைகள் மற்றும் மக்கள் தொடர்பான செய்திகளை உருத்திரபுரம் என்ற ஒரு குடையின் கீழ் வைத்திருப்பது உருத்திரபுரம் கிராம மக்களின் ஒற்றுமையை மற்றவர்களுக்கு காட்டமுடியும்.

அனைவரையும் ஒன்றிணையுமாறு வேண்டுவதோடு எமது இந்த வலைப்பதிவை அனைத்து உருத்திரபுரம் மக்களுக்கும் வெளிக்காட்டுங்கள்.

மிகவிரைவில் தனித்தனிப்பக்கங்கள் இங்கு உருவாக்கப்படும் 

நன்றி
உருத்திரபுரம் வலைப்பதிவு ஆசிரியர்

0 கருத்துக்கள்:

Post a Comment