இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Thursday, October 21, 2010

உருத்திரபுரம் பிரதேச பாடசாலைக்களுக்கு நூலுதவி செய்த நண்பர்கள்

2 கருத்துக்கள்
உருத்திரபுரம் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு உருத்திரபுரம் பிரதேச நண்பர்கள் சிலரால் நூல்கள் கையளிக்கப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். 
பயன் பெற்ற பாடசாலைகள் 
கிளி/ உருத்திரபுரம் மகா. வி  
கிளி/ புனித பாற்றிமா .   றோ. க. த .க. வி
கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை
இந்த செற்திட்டத்தை ஒழுங்கு படுத்திய குணா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிப்பதோடு அதற்கான நிதியுதவிகளை வழங்கிய குணா அவர்களுன் அவரது நண்பர்களான நிரு மற்றும் மரிஷா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
          
              
இம் மூன்று பாடசாலைகளுக்கும் சாதாரண தர  மாணவர்களுக்கான தமிழ், கணிதம், விஞ்ஞானம், அங்கிலம், கிறிஸ்தவம் ஆகிய பாடங்களில்  கடந்தகால வினாவிடைப் புத்தகங்களுடன், வரலாறு, சித்திரம், வர்த்தகமும் கணக்கியலும் ஆகிய பாடங்களில்  பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், உயர்தரப் பாடசாலையான உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திற்கு வரலாறு மற்றும் நாடகம் ஆகிய இரு பாடங்கள் தவிர்ந்த ஏனைய சகல பாடங்களுக்குமான  கடந்தகால வினாவிடைப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 
அத்துடன் பாடசாலை அதிபர்களால் புத்தகங்களை பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்களையும் இங்கு இணைத்துள்ளோம்.
இப்படியான செயற்பாடுகளை நாம் வரவேற்பதோடு. இது போல் பலரையும் எமது கிராமத்தை வளப்படுத்த முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம். நேரடியாக செய்யமுடியாதவர்கள் எமது மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்புகொண்டால் சம்மந்தப்பட்ட தகவல்களை தருவதோடு தொடர்புகளையும் ஏற்படுத்தி தருவோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி
வலைப்பதிவு ஆசிரியர்
மா.குருபரன்

2 கருத்துக்கள்:

Post a Comment