இணையத்தின் முதற்பக்கத்தில் ஒரு பதிவு மட்டுமே வருகிறது. விரைவில் கோளாறு திருத்தப்படும். அதுவரையில் Older Posts என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லலாம். ..
காப்புரிமை (copyright): இத்தளத்தின் சகல உள்ளடக்கங்களும் உருத்திரபுரம் வலைத்தளத்திற்குரியது. வேறுதளங்களில் பாவிப்பதற்கு முன் அனுமதி பெறவும்.

Tuesday, November 16, 2010

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக நிர்வாகத் தெரிவு

4 கருத்துக்கள்
நீன்டகால இடைவெளிக்கு பின் நடைபெற்ற உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் இ சனசமூகநிலையத்தின் பொதுக்கூட்டம்  
மேற்படி பொதுக்கூட்டமானது கடந்த14ம்திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் கழகமைதானத்தில் குணா தலைமையில் நடைபெற்றது.அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டமானது போர் காரணமாக உயிர்துறந்த அனைத்து கழக உறுப்பினர்களையும் நினைவுகூறப்பட்டதுடன் எதிர்கால கழக அபிவிருத்தி தொடர்பாகவும் தலமை உரையில் கூறப்பட்டது.தொடர்ந்து எமது மதிப்புக்குரிய நாகலிங்கம் மாஸ்ரர் அவர்களினால் கழகத்தின் வரலாற்ரினை எடுத்துக்கூறப்பட்டதுடன் தனது கடைசி மகன்(கண்ணன்)தனது இளமை காலத்தினை இக் களகத்தினிலே களித்தார் என்று தனது உரையில் கூறினார். தொடர்ந்து புதிய நிர்வாகத்தெரிவு இடம் பெற்றது.  நிர்வாக உறுப்பினர்களாக!
தலைவர்:-இ.புவிராசலிங்கம் 
செயளாளர்:-இ.பத்மகுமார்
பொருளாளர்:-பே.புண்ணியமூர்த்தி
உபதலைவர்:- அசந்தன்
உப செயளாளர்:-மா.அயந்தன்
மைதான செயளாளர்:-இ.குணா
அணி முகாமையாளர்:-க.பிரபாகரன்
விளையாட்டு செயளாளர்:-ஸ்ரீ.பிரதீஸ்
விசேட ஆலோசகர்:-நாகலிங்கம் மாஸ்ரர்
இப் பொதுக்கூட்டத்துக்கு 27 கழகஉறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் செயளாளர் இ.பத்மகுமார் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவடைந்தது.  









தகவல்: - உருத்திரபுரத்திலிருந்து பிரதீஸ்

உருத்திரபுரம் கழகத்தின் செயற்பாடுகளும் அதனூடான அபிவிருத்தி மற்றும் திறன் செயற்பாடுகள், உருத்திரபுரம் கிராமத்தை விருத்தி செய்வதோடு கிராமத்திற்கு சிறந்த இடத்தை மற்றய சமூகங்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை உருத்திரபுரம் கழக செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த தெரிவு செய்யப்பட்டிருக்கும் புதிய நிர்வாக குழுவிற்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.


இதே போல் உருத்திரபுர கிராமத்தின் மற்றய இரு சகோதர விளையாட்டுகழகங்களான உழவர் ஒன்றியம் மற்றும் சந்திரோதையா விளையாட்டுக்கழகத்தினரும் தமது செயற்பாடுகள் குறித்து எமக்கு தெரியப்படுத்தினால் அனைவருக்கும் செய்தியை கொண்டு செல்வதற்கு நாம் ஆவணை செய்வோம் என்பதை இந்த வலைப்பதிவு நிர்வாகத்தினர் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் கிராமத்தை மக்களின் ஒற்றுமை மற்றும் உழைப்பினூடாக உயர்த்திக் காட்டுவோம் என உறுதிபூணுவோம்


நன்றி


வலைப்பதிவு ஆசிரியர்
மா.குருபரன்

4 கருத்துக்கள்:

Post a Comment